(மருவிய) பழமொழிகள் -களவும் கத்து மற

3060

“களவும் கற்று மற”.. இது எம்மில் பலர் அடிக்கடி சொல்லும் பழமொழி ஆகும். இது “எல்லாத்தையும் கற்றுக் கொள்” என்ற பொருளில் சொல்லப்படுகிறது. “களவைக் கூடக் கற்றுக்கொள். ஆனால் மறந்து விடு” என்பதன் மூலம் கற்றலின் முக்கியத்தையும் கற்ற பின் நினைவில் கெட்டதை விட்டிட வேண்டும் என்றும் பொருள் படச் சொல்லப்படும் இப்பழமொழியின் பொருள் இப்படியும் இருக்கலாம்.

“களவும் கத்தும் அற”.. அதாவது களவையும் பொய் உரைத்தலையும் அழி(அற). எப்படி ஆயினும் பழமொழிகளை பலவாறு ஆராய்ந்து அவற்றின் மெய்ப்பொருள் காண்பதே அறிவு.