நாள் : 10
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்.
பிறவியாகிய பெருங்கடல் நீந்த எளிய வழி இறைவன் அடிகளைப் பின்பற்றுதலே ஆகும். இறைவன் யார்? இந்தக் கேள்விக்கு பதில் முதல் ஒன்பது செய்யுள்களில் உள்ளது.
1. உலகிற்கு முதன்மையானவன். அனைத்துப் பொருட்களிலும் உள்ளவன்
2. அனைத்து அறிவுகளும் கொண்டவன் வாலறிவன்
3. இதயத்தில் இருப்பவன்
4. இது வேண்டும் இது வேண்டாம் என்னும் விருப்பு வெறுப்பற்றவன்
5.அனைத்து வினைகளுக்கும் பயன் தருபவன். பெறுபவன்
6. உணர்வகளாலன்றி அறிவால் அறியப்படுபவன்
7. உவமை சொல்லப்பட இயலாதவன்
8. அறக்கடலாக விளங்குபவன்
9. எட்டு குணங்களைக் கொண்டவன்.
இப்படி அறியப்படும் இறைவனின் வழிகளைப் பின்பற்ருவனே பிறவி என்னும் இந்தப் பெருங்கடலில் நீந்திக் கரையேற இயலும். மற்றவர்கள் பிறவியென்னும் இந்தக் கடலிலேயே மூழ்கி விடுவார்கள்