தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆவணமாக்கல்

தேசியத்தலைவர் அவர்களின் தலைமையில் வீறு கொண்டு எழுந்து, போராளிகளின் அதி உன்னத ஈகங்களாலும் அர்ப்பணிப்புக்களாலும் கட்டி எழுப்பப்பட்ட ஈகைப்போர் ஹிந்திய சர்வதேச காட்டுமிராண்டி அரசுகளின் துணையுடன் முள்ளிவாய்க்காலில் மெளனிக்கப்படும்வரை அது கண்ட சாதனைகள் சோதனைகள் பலப்பல. போராட்டத்தின் தடைகள் அனைத்தையும் போராளிகள் தங்கள் ஈகங்களாலேயே உடைத்து அவர்கள் வெற்றுடல்களிலேயே ஈகப்போரை நகரவைத்தார்கள்.

இவ்வாறான நினைத்துப்பார்க்கவே முடியாத அந்த அதிமானுடர்களின் ஈக வரலாறு ; அவர்கள் எதிர்கொண்ட புறச்சூழ்நிலைகள் என்பன அவற்றுக்கேயுரிய முக்கியத்துவத்துடன் போர்வரலாறு ஆவணப்படுத்தல் மிக அவசியம்.
புலிகள் அமைப்பாக இருந்தவரை அவற்றை செம்மையாகவே செய்துவந்தார்கள். ஆனால் புலிகள் இல்லாத இக்காலகட்டத்தில் அவற்றை கொண்டுசெல்லக்கூடியது இன்றும் நம்முள்ளே வாழும் முன்னாள் போராளிகளாலே அது சாத்தியம்.

ஒரு மகத்தான தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் போராட்டப் பாதையில் பயணித்த பலர் தம்முள் குத்துவெட்டுப்படுவதைத்தவிட வேறொன்றையும் சிந்திக்காத இவ்வேளையிலும் புலிகளின் மருத்துவப்பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரான மருத்துவர் தணிகை அவர்களது பணியை இங்கே குறித்து காட்டுதல் அவசியம்.

தம்பி திரு இரத்தினம் கவிமகன் அவர்களது எழுத்துவடிவில் தனது அனுபவங்கள் எழுத்துரு பெறவேண்டும் எனும் நோக்கில் இன்றும் செயற்படும் அண்ணன் தணிகை அவர்களுக்கு எங்கள் நன்றியறிதல்கள்.

முன்னாள் போராளியும்; புலிகளின் மத்திய குழு உறுப்பினராக இருந்து சேமமடுப்பகுதியில் வீரச்சாவடைந்த மேஜர் செங்கதிர் அவர்களின் மருமகனாகிய திரு இரத்தினம் கவிமகன் அவர்களது சேவையை இங்கு சிலாகித்தல் அவசியம்.

தணிகை அவர்கள் போன்ற சில போராளிகளை முன்மாதிரியாகக் கொண்டு எல்லாப்போராளிகளும் இவ்வாறான ஆவணப்படுத்தலை செய்ய முன்வரவேண்டும்.

அன்புரிமையுடன்

ஈழப்பிரியன் பாலன்
( Eelapriyan Balan )