சமர்க்கள நாயகனுக்கு வீரவணக்கம்.

செம்பியர்கள் தரையிறங்கி
சென்ற செம்பியன்பற்றில்,

தரையிறங்கி வென்ற(26/03/Y2K)
செம்பியன் புதல்வனே!

தரையில் காலூன்றி நின்ற
தங்கத் தாரகையே!

சன்னங்கள் நடுவே வாசம் செய்த
உன்னதமே!

சமர்க்கள நுணுக்கம் உரைக்கும்
சமர்கள அகராதியே!

தமிழரெம் அன்பு நிறை தளபதியே!

புறநானூற்று வீரத்தை
விஞ்சும்
நெஞ்சுரம் கொண்டவனே!

பால்ராஜ்
அண்ணனே!

வீரவணக்கம்!🙇🏻‍♂️