தியாக சீலம்

✨ We ❤️ Paris! Such a great to explore! 🇫🇷

“நெப்போலியன் வளைவு” என
எல்லூராலும் அழைக்கப்பட்டாலும். இங்கே இந்த இடத்திலும் பிரெஞ்சு தேசத்தின் பெயரறியா வீரன் ஒருவனே உறங்குகிறான்.
(The grave of the Unknown Warrior)

தாயகம் காக்க தம்முயிர்நீத்த பெயரறியா வீரர்களின் நினைவுச் சின்னங்களை அனேகமாக எல்லா நாட்டவரும் கண்ணின் மணி போலவே காத்து வருகின்றனர்.

உருசியா(ரஷ்யா) நாட்டில் திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு மண இணையரும் திருமண நிகழ்வின் அடுத்த நிகழ்வாக ரஷ்யா நாட்டின் பெயரறியா வீரர்களின் நினைவுச் சின்னங்களுக்குச் சென்று வணக்கம் செலுத்துவர்.

இரண்டாவதாக உருசியப் புரட்சியாளரும்
சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபருமான விளாதிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin) துயில் கொண்ட
நினைவாலயதுக்குச் சென்று வணக்கம் செலுத்துவர்.

உருசியர்களின் தேசம் மீதான தீராத காதலை அது எடுத்தியம்பி நிற்கிறது.

இலண்டன் நகரில் Westminster Abbey என்ற இடத்திலும் பெயரறியா வீரன் ஒருவன் உறங்குகிறான். அவனது வித்துடல் 11/11/1920ஆம் ஆண்டு பிரெஞ்சு தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டு விதைக்கப்பட்டு உள்ளது.

பிரித்தானியர்கள் அதியுயர் மரியாதை கொடுக்கும் இடமாக அந்தக் கல்லறையே திகழ்கிறது.

இங்கிலாந்து மகாராணி மற்றும் அவர் குடும்பத்தவர்கள் அங்கே சென்று மரியாதை வணக்கம் செய்வதை அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கமுடியும்.

எங்கள் தாய்நிலத்தில் உள்ள துயிலும் இல்லங்களிலும் “தியாகசீலம்” என்ற பெயர் தாங்கிய கல்லறைகள் இருக்கும்.

சில துயிலும் இல்லங்களில் அவை  ஒரு பகுதியாகவே #தியாகசீலம் என்ற பெயரில் விதைக்கப்பட்டிருக்கும்!

அந்தக் கல்லறைகளில் பெயர், முகவரி,
அவதரித்த நாள் போன்றவை இருக்காது.

முகம் சிதறிவிட்ட உடலங்களில்,அந்த வீரர்களின் கழுத்தில்,கையில்,இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் தகட்டு இலக்கத்தை வைத்து அடையாளம் காணப்படமுடியும்.

தகட்டு இலக்கமும் அறுந்து,சிதறி,அழிவடைந்த நிலையில் மீட்கப்படும் வீரர்களின் வித்துடல்களை தியாகசீலம் எனப்பெயரிட்டு விதைக்கப்படும்.🙏