உயர்”win” பாதை.

தன்னம்பிக்கை எமது இலட்சியத்தை நாமடைய உதவும். தன்னம்பிக்கையை மக்களிடத்தில் வளர்த்தால் எம்மைச் சூழ உள்ள தீமைகளும் துன்பங்களும் காணாமல் போய்விடும். வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால், சிறப்பாக வாழ்ந்தவர்கள் அனைவருமே தன்னம்பிக்கை நிறைந்தோராகவே இருந்திருக்கின்றனர். 

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். எவ்வளவு தாழ்ந்த நிலைக்கு ஒருவன் தள்ளப்பட்டாலும் ஒரு கட்டத்தில் முரட்டுத் துணிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். அத்தருணத்தை சரியகப் பயன்படுதி எழ வேண்டும். 

தன்னம்பிக்கையோடு “ஆண்டவன் இருக்கிறான்.. கைவிட மாட்டான்” என்ற கடவுள் நம்பிக்கையும் சேர்ந்தால் அதன் பலன் மிகவும் உச்சமாக இருக்கும். தன்னம்பிக்கை இல்லாமல் கடவுள் மேல் நம்பிக்கை வைப்பது மூட நம்பிக்கை ஆகும். 

தன்னைத் தானே விரும்பும் ஒருவனிடமே தன்னம்பிக்கை விரும்பிச் சேர்கிறது. எவன் ஒருவன் தன்னைத் தான் வெறுக்கிறானோ, அவனுக்கு அழிவின் வாசல் திறக்கிறது என்று அர்த்தம்.

இவை ஒருபுறம் இருக்க எங்கள் எண்ணங்களே எங்களை இயக்குகிறது. நான் பலவீனமானவன் என நினைத்தால், பலவீனமானவாகவே ஆகிவிடுவேன். நான் பலமானவன் என்ற எண்ணம் கூட தன்னம்பிக்கையின் ஒரு பகுதியே..

எனவே “நான் பலமானவன்.. அறிவும் ஆற்றலும் கொண்டவன்.. என்னால் எந்தக் கடினமான காரியத்தையும் செய்ய முடியும்” என்ற எண்ணத்துடன், அறிவையும் பிரயோகித்தால் வெற்றி எம்மைத் தேடிவரும்.