கிட்டு மாமா என்று சிறுவர்களால் அன்பாக அழைக்கப்பட்ட தமிழர்களின் மூத்த தளபதி திரு கிட்டு அவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்த காலங்களில் தாயகத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் அனுப்பினார்.
குறுகிய காலத்தில் கூடுதல் விளைச்சல் தரக்கூடிய பல பயிரினங்களின் விதைகளையும் அனுப்பி வைத்தார்/அறிமுகம் செய்தார். அருமையான கிட்டுமாமாவால் அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட பாப்பா விதைகளைப் பெருக்கி மக்களிடம் கையளித்தவர்கள் தமிழீழ பொருண்மிய நிறுவனத்தினர்.
அஃதே தமிழர் நிழலரசு சுற்றுச் சூழல் தொடர்பிலும் மெத்தக் கவனம் எடுத்தது.
“நெகிழ்வுப்பை“களின் பாவனையை வெகுவாகக் குறைத்ததுடன் அவற்றுக்கான பதிலீடுகளையும் சந்தைப்படுத்தியது.
அன்னை தேசத்துக்கு விசமூட்டக் கூடிய மிக மோசமான செயற்கைப் பசளை வகைகள், பீடை நாசினிகள், நாசினிகள் தொடர்பான விழிப்பூட்டல்கள் தொடர்ச்சியாக புலிகளின் குரல், தமிழீழ வானொலி ஆகிய தேசிய ஊடகங்களில் ஒலிபரப்பப்பட்டது.
ஈழநாதம் பத்திரிகையிலும் இயற்கை வேளாண்மை தொடர்பான தொடர்கட்டுரைகள்
வெளி வந்து கொண்டிருந்தது.
பத்திரிகையில் வெளிவந்த இந்த விழிப்பூட்டல் கட்டுரைகள் நல்ல ஊட்டமாக எங்கள் உழவர் பெருமக்களின் மனங்களை வளம்படுத்தியது.
பெரும்பாலன கட்டுரைகளை எழுதியர் இனுவையூர் சிதம்பரநாதன் அவர்கள் ஆவார்.
செயற்கைப் பசளைகளுக்கு பதிலீடாக உள்ளூரிலேயே இயற்கைப் பசளைகளைத் தயாரித்தது.
இயற்கைப் பசளையைத் தயாரித்துவிட்டு பெயர் சூட்டுவதற்காய் பல பெரியவர்களிடம்த மிழன்பர்களிடமிருந்து பெயர்கள் பெறப்பட்டது.
தமிழுலகு நன்கு அறிந்த பெருங்கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களும் நல்ல பல பெயர்களை அனுப்பிவைத்திருந்தார்.
ஆனாலும்,
“பயிரமுது” எனப் பெயர் கொடுத்தவர் அப்போது தமிழீழ பொருன்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் பணி ஆற்றிய ஏட்டறிவும் பட்டறிவும் கொண்ட பெட்டகமாய் விளங்கிய ஓர் பெரியவர்.
அவர் சுட்டிய பெயர் நினைவைத்தாலட்டும் போது அவர் பெயர் ஆவணப்படுத்த முடியாமல் போனது வேதனையே!
தொழிலதிபர் மில்க்வைற் கனகராசா அவர்களும் பின்னர் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரும் கடந்த காலத்தில் மரநடுகையை எங்கள் தாய்நிலத்தில் ஊக்குவித்தனர்.
தனிமனிதனாக திரு கனகராசா அவர்களும் எம்மண்ணில் நிறைய மரங்கள் நட்டுத் தள்ளிய ஒரு உத்தம புருஷர். மில்க்வைற் அதிபர் கனகராஜா அவர்களை பற்றி அமெரிக்க எழுத்தாளரும் ஸ்கொலருமான டொக்ரர் ஹோல்ம்ஸ் என்பவர் Jaffna 1981 என்ற நூலில் பாராட்டி எழுதியிருப்பதையும் நினைவு கூர விரும்புகிறேன்.
மக்களை நேசிக்கின்றோம்! மண்ணை நேசிக்கின்றோம்! மரங்களையும் நேசிக்கின்றோம்! -எம் மண்ணில் விழைந்த அனைத்தையும் அன்று போல் இன்றும் நேசிக்கின்றோம்!!! என்றும் நேசிப்போம் வாரீர்!
-வயவையூர் அறத்தலைவன்