நாளொரு குறள் – 40

நாள் : 40
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அறன்வலியுறுத்தல்
செய்யுள் :10

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

மிக எளிய செய்யுள்.

செய்ய வேண்டியது என்ன?

அறம்

ஒழிக்க வேண்டியது என்ன?

பழிக்கப்படும் செயல்கள்.

ஆக இரண்டும் செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

அறம் என்பது என்ன?

அறம் என்பது பிறர் வாழ்வைச் செம்மையாக்குவதும், நம் மனதைத் தூய்மையாக்குவதுமான ஒன்றே ஆகும் என்பதை வள்ளுவர் முன்பே அழகாகச் சொல்லி கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட காரியங்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இது மட்டும் போதுமா என்றால் இல்லை. அறத்தைக் காக்க இன்னொன்றும் செய்ய வேண்டும். அது என்னவெனில் பழிக்கத்தக்கச் செயல்களை ஒழிக்க வேண்டும். நாம் செய்வதைக் கைவிடுதல் மட்டுமல்ல. மற்றவரும் செய்யாமல் காக்க வேண்டும். அதுவே ஒழிக்க வழி.

ஆக நாமாகச் செய்வது ஒருபாதி… இன்னொருவர் செய்யும் பழிபாவக் காரியங்களை தடுப்பது இன்னொரு பாதி.

இரண்டும் இருந்தாலே அறம் நிலைக்கும்.