நாளொரு குறள் – 35

நாள் : 35
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அறன்வலியுறுத்தல்
செய்யுள் :5

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

அறம் என்பது செயல் மட்டும் அல்ல, அது செய்யப்படும் வகையும் கூட என்றன முந்தைய இரு செயல்கள் என்றன.

அறம் செய்யப்படும்பொழுது இருக்கக் கூடாதவை நான்கு விஷயங்கள்

1. அழுக்காறு – பொறாமை…
2. அவா – ஆசை, பேராசை..
3. வெகுளி – கோபம்
4. இன்னாச் சொல்

முதல் மூன்றும் மனதின் சிந்தனையை காட்டும்.

ஒருவன் புகழைக் கண்டு பொறாமை கொண்டு, அவனை மிஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தில் அறம் செய்யக் கூடாது.

அறக் காரியங்கள் செய்வதினால் எனக்கு அது கிடைக்கும் இது கிடைக்கும் என்ற ஆசை, பேராசைகளில் செய்யக் கூடாது.

இன்னொருவர் மேல் கொள்ளும் கோபத்தினால் பழிவாங்கும் என்னத்துடன் அறக்காரியங்கள் செய்யக் கூடாது.

அதாவது அறக்காரியங்களை சுயநல நோக்கில் செய்யக் கூடாது. அறம் செய்யும்பொழுது சுயநலத்தை விட்டுவிட வேண்டும்.

அடுத்து சொல்வது இன்னாச் சொல்.

இது ஒரு செயல். நம்ம தளபதி மாதிரி நல்ல காரியத்தை திட்டிகிட்டே செய்யாதீங்க. தியாகு மாதிரி இனிக்க இனிக்க பேசிச் செய்யுங்கள் என்கிறார் வள்ளுவர்.

அல்லது பேசமலே கூடச் செய்யலாம்