WE ARE AND WE WILL

World Cancer Day and Sri Lankan Independence Day! (04/02/2020)

தேகம் புற்று நோயால் பீடிப்பது போலவே தமிழர் – எம்….

தேசமும் புற்று நோயின் பிடியில் உள்ளது.

ஆறு தசாப்தத்துக்கு மேலான
சிங்களக் குடியேற்றம், இனவாாத்அம், மதவாதம் என பல தரப்பட்ட புற்று நோய்களால் ஈழத்தாய் அவதியடைந்து வருகிறாள்.

புற்றுநோய்க்காய் அகிம்சை வழியிலும் ஆயுதவழியிலும் மிகப்பெரும் உயிர்விலை கொடுத்து ஈழ அன்னைக்கு சிகிசை கொடுத்தோம்.

இமயமலையிலிந்து (Himalaya) மூலிகை எடுத்துக் கொண்டு சிகிச்சைக்கு வருவதாய் பாசாங்கு செய்தவனும் (1987) ஈழத்தாயிடம் பாலியல் பலாத்காரம் செய்தான்.

மென்முறையாம் அகிம்சையை அகிலத்துக்கு போதிப்பவனும் ஈழத்தாயிடம் வன்முறையே செய்தான்.

ஈற்றில் அதிகரித்த கீமோவால்(Chemotherapy) அவள் நலிந்து நிற்கிறாள்.

நாளும் அவள் ‘கேசம்’ உதிர்ந்து வருகிறது.

நாளும் அவள் ‘தேகம்’ உருகி உருகி தேய்மானம் கண்டு வருகிறது.

வேதனையால் முனகும் ஈழத்தாயை அனுதினமும் பார்த்துப் பார்த்து வாடி நிற்கும் அவள் பிள்ளைகளாகிய எங்களுக்கு இன்று சுதந்திரதினமாம்..????

உலகப் புற்று நோயாளர் தினமும் இலங்கையின் சுதந்திர தினமும் (04/02 இல்) ஒரே நாளில் அதிகரித்த துக்கத்துடனும் அதே நேரம் விழிப்புணர்வுடனும் தமிழர்களால் நினைவு கூரப்படுகிறது என்பதுதான் யதார்த்த நிலை ஆகும்.

ஆம், புற்று நோயால் பீடித்த
ஈழத்தாயின் இந்த அவலம் போக்கிட ஒவ்வொரு தமிழனும் “நாங்கள் இருக்கிறோம் எங்களால் முடியும்” (‘WE ARE AND WE WILL’)என உறுதி எடுக்க வேண்டும்.

-வயவையூர் அறத்தலைவன்-