மக்களுக்காக மரணித்தவர்கள் நம் மானமாவீரர்கள் என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவு உண்மையானது மக்களிலிருந்து வந்தவர்கள்தான் மாவீரர்கள் என்பதுவும்..
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மட்டுமல்ல மே 18. எமது விடுதலைப் பாதையில் கொன்று குவிக்கப்பட்ட ஒட்டு மொத்த மக்களுக்குமானது மே 18. அத்தனை மக்களையும் நினைவிறுக்கி எழுச்சி கொள்ளும் நாள் மே18… இனவழிப்பு நாளாக மே 18 ஐ தமிழர் நாம் பிரகடனப்படுத்தியதும் இதனால்தான். அதன் மாண்பு காக்க வேண்டியது நம் பொறுப்பு.
2018… வன்னியில் யுத்தம் உச்சம் தொட்டு கொத்துக் கொத்தாக நம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை கேள்விப்பட்டு, ஒன்று ஒன்றாக சேர்ந்து தெருவில் இறங்கி ஒன்றாகி அறப்போராட்டத்தில் பிரான்சு வாழ் மக்கள் ஈடட்ட காலம்..
வேலை வீடு எனும் அன்றாடத்தை துறந்து வேலை போராட்டக் களம் என்று நாளாந்தத்தை வடிவமைத்துக் கொண்டார்கள். வெட்டும் பனி, கொட்டும் மழை, சுட்டெரிக்கும் வெய்யில் அனைத்தையும் தாங்கி இரவு பகலாக போராடினார்கள்..
பற்றைக்காடுகளிலும் பெருங்கட்டடங்களின் படிக்கட்டுகளிலும் படுத்துறங்கி போராடினார்கள். ஆனால் அங்கேயும் சில களங்கள் நிகழ்ந்தேறி நெஞ்சை வருத்தியது..
போராட்டக்களைப்பில் படுத்துறங்கிய பற்றைக் காடுகளை வெகு சிலர் தங்கள் “தேவைக்காக” வும் பயன்படுத்தினர். போராடிய மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளை ஏதோ கோவிலில் வழங்கப்படும் சுண்டல் போல கருதி மீச்சிறு மக்கள் செயல்பட்டனர்.. இவை எல்லாம் பாரதூரமானவை அல்ல என ஆற்றுப்பட முயன்றாலும் வெள்ளைப் போராட்டத்தில் விழுந்த கறைகள்தான்…
எங்கள் இரத்தக்கறை சுமந்தோடும் முள்ளிவாய்க்காலில் வேறு கறைகள் கலந்திடக் கூடாது.. “முள்ளிவாய்க்கால் கஞ்சி” கறையாகி விடுமென்ற அச்சம் மேலெழுகிறது.. இல்லை எனச் சமாதானப்பட முனைந்தாலும் கறை படியக் காரணமாகி விடுமோ என்ற குறைந்த பட்ச அச்சம் விலகவில்லை..
விடுதலைப் பயணத்தில் மரணித்த மாவீரர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்.. விடுதலைப் பயணத்தில் கொல்லப்பட்ட மக்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.. அந்த வகையில் மே 18 உம் புனிதமானதுதான்..