முள்ளிவாய்க்கால்… எக்காலமும் தமிழனின் நெஞ்சில் உயிர்ப்போடு ஓடிக் கொண்டே இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் வெறும் ஊடக வாழியாக முள்ளிவாய்க்கால் ஆகி விடக்கூடிய ஏது நிலையே இன்றைய நிலைமை.
மே மாதங்களில் களியாட்டங்கள் தவிர்க்கப்பட்ட காலம் போய், மே 18 ஐ ஒட்டிய வாரத்தில் களியாட்டங்களை தவிர்க்கும் அளவுக்கு சுருங்கக் கூடியதல்ல முள்ளிவாய்க்கால்.
தார்ப்பட்டுச்சாலைகளாலும் நீள் நெடு கடலோரக் கரைகளாலும் உயர் ரகங்களாலும் மறைக்கப்படக் கூடியதல்ல முள்ளிவாய்க்கால்..
ஏதோ ஒரு காரணத்தால் அருகில் கேட்கும் அழுகையில் காணக் கூடியது முள்ளிவாய்க்கால்.
சற்றே வேகமெடுக்கும் காற்றை உற்றுக் கேட்டால் உணரக் கூடிய கதறல் முள்ளிவாய்க்கால்..
கண்ணுக்குத் தெரியாத பெயரே அறியாத உயிரியின் உதிரத் துளியில் நெளியும் துயரம் முள்ளிவாய்க்கால்..
ஆம்…! முள்ளிவாய்க்கால் எம்முள்ளே ஓடிக் கொண்டிருக்க வேண்டியது.. ஊடக வாழியாக இருக்க வேண்டியதல்ல…
..