குடாரப்பு (26/03/2000)

படை அமைத்தலில், படை நடத்தலில், படை இணைத்தலில் அது ஓர் புதியசாதனை.

பெருங்கடலையும் பெருந்தளங்களையும் தாண்டித் தரையிறங்கி பகை வென்ற சாகச்சமர்.

4 ஆவது நாளில் பிரிகேடியர் தீபன் அவர்களால் தரைவழி திறக்கப்பட்டாலும்,

முதல் மூன்று நாட்களும்
விநியோகத்துக்கான தரைவழிப்பாதை
அறவே இல்லாத மிகப் பெரும் சமர்.

பாரிய போராயுதங்களினால் விழுப்புண் அடைந்து உயிருக்குப் போராடும் வீரர்களை உடனடிச் சத்திரசிகிச்சைக்கு அனுப்ப வேண்டியவர்களையே அனுப்ப முடியாத வெறிகொள் செங்களம்.

சிங்களம் திகைத்திடக் களமாடும் வீரர்களுக்கு மிக அருகே நின்று
அன்னையாய் தந்தையாய் மாறி சிகிச்சை அளித்தனர் களமருத்துவர்கள்.

காயமடைந்தவர்களில் அதிக குருதிப் பெருக்கு ஏற்பட்டவர்களுக்கு தாங்கள் கூல் பொக்ஸில் கொண்டு சென்ற குருதியை ஏற்றினர்.

“படகு கவிழ்ந்தாலும் கூல் பொக்ஸில் உள்ள குருதியைக் கைவிட்டுவிட வேண்டாம்”எனக் கூறி சுண்டிக்குளத்தில் வைத்து திருமிகு இ. ரேகா அவர்கள் கையில் தந்துவிட்ட குருதி உயிர் காக்கத் தொடங்கி இருந்தது.

ஆண் போராளி ஒருவர் நெஞ்சிலே ஏற்பட்ட காயத்தால் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.

நுரையீரலுக்கும் நெஞ்சறைச் சுவருக்கும் இடையே உள்ள புடைக்குழியினுள் குருதி வெளியேறியதால் நுரையீரல்(A space between Lung and chest cavity)
விரிவடையமுடியாமல் இருந்தது. ஆதலால் மூச்சு எடுக்கக் கஸ்ரப்பட்டார்.

மின்னலென விரைந்து செயற்பட்டு Intercostal Drainage Tube(ICD tubu)போட்டு அவரைக் காப்பாற்றினர் தமிழர்சேனையின்
சிறப்பு மருத்துவ அணியினர்.

நீரின் வெளியே மீனாகத்(Fish out the water) துடித்தவர் இப்போது ஆழமான மூச்சுவிட்டு அமைதி அடைந்தார்.

தனக்கு அடுத்த நிலையிலிருந்த அணித்தலைவரிடம் செய்யவேண்டிய பணிகளை ஒப்படைத்தார்.

“அடுத்த அடுத்த கிழமைகளில் நாம் அடையப்போகும் வெற்றிக்கான வேதனையை வெற்றி கண்டு உள்ளோம்”என உச்சத்துப் பல்லி போல
Dr.வித்தகி அச்சம் இன்றிச் சொன்னாள்.

பாரிய கட்டடங்கள் அல்லது முன்கூட்டியே அமைக்கப்பட்ட நிலக்கீழ் பதுங்கழிகள் அங்கு இருக்கவில்லை.

ஆதலால்,

திறந்த பதுங்ககழிகளிலேயே காவு படுக்கையுடன்(With Stretcher) தூக்கி வைத்தோம்.

அஞ்சிஞ்சி மோட்டார்களிலிருந்துப் விண்ணில் ஏவப்பட்ட எதிரியின்
பாரா வெளிச்சங்கள் இரவைப் பகலாக மாற்றிக்கொண்டிருந்தது.

அந்தப் பராவெளிச்சத்திலேயே உதவு மருத்துவர் வண்ணன் லெப்.கேணல் சாந்தகுமாரியிற்கு ஒவ்வொரு மணித்தியாலமும் தவறாமல் குருதி அமுக்கத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

சின்னஞ் சிறிய படகுகள் கொண்டு பாரிய போர்த்தளபாடங்களுடன் சத்திரசிகிச்சைக்கூடத்தையே எம்முடன் கடல்வழி இறக்கிவிட்ட கடல்புலிகளின் வலுவை எப்படி உரைப்பது.