சா தீ..

257

சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள் மற்றவர்களை அடிமைப்படுத்த, கேவலப்படுத்த தாழ்த்த உருவாக்கியது சாதி. தாங்கள் சொன்ன பொய்க்கு வலிமைசேர்க்க பிரம்மாவின் உடம்பில் ஒவ்வொரு பாகத்திலிருந்தும்இவர் இவர்கள் பிறந்தார்கள் என சொல்லி பயமுறுத்தி ஆட்டிப் படைக்கிறார்கள்.

இறைவன்

பெயரால் சொன்னால் பயப்படுவார்களள்; தம் இழிசெயலை தொடரலாம் என்ற நோக்கத்தில் இட்டுக்கட்டப்பது இந்த விடயம். உயிர்களை பிரம்மா இப்படித்தான் படைக்கிறார் நான் அதை பார்த்தேன் என எவராவாது சொல்லமுடியுமா? அல்லது சொல்லித்தான் இருக்கிறார்களா?

கற்பனைக்கு கூட ஏற்கமுடியாத பொய்களை இறைவன் பெயரில் கட்டவிழ்ந்த்து விட்டார்கள். ஏனென்றால் இறைவன் நேரில் வந்து கேட்க்க மாடடார் எனும் நம்பிக்கை .

எல்லா மனிதர்கள் உடம்பிலும் சிவப்பு நிற குருதிதானே ஓடுகிறது. அதை ஒவ்வொரு சாதிக்கும் ஏற்றால்போல் ஏன் வைக்கவில்லை அல்லது ஒவ்வொரு சாதிக்கும் ஏற்றால்போல் ஏன் உருவங்களை படைக்கவில்லை?
மிகவும்கேவலமான’அருவருக்கத்தக்க’மிருகத்திலும் கேவலமான செயல் இந்தச் சாதீயப் பிரிவினை. எத்தனையோ பேர் எவ்வளவோ சீர்திருத்தங்களை சொல்லியிருக்கிறார்கள், சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சாதீயம் அழிந்தபாடில்லை.

தொழில் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சாதி
இப்போ அடையாளமாக மாறிவிட்ட்து. சாதியால் ஏற்படட கொடுமைகள்
ஒரு சில அல்ல கணக்கில் அடங்காதவை. எவ்வளவுதான் படித்திருந்தாலும்
சாதியை சொல்லி கேவலப்படுத்துவது. ஒதுக்குவது பொருளாதாரத்தில் முன்னேறினாலும் புறக்கணிப்பது. இப்படியே
சொல்லிக்கொண்டே போகலாம். எரிக்கிற சுடுகாட்டில்கூட வேறுபாடு

ஆனால் சாப்பிடுகிற அரிசி எந்த சாதி உருவாக்கியது என பாக்கமாட்ட்டார்கள்
ஏனெனில் பசி,உயிர் பிழைக்க உணவு தேவைப்படும்போது பாப்பதில்லை
உயிர் வேணும் என்றால் எதையும் பாப்பதில்லை, கண்ணுக்குத்தெரிந்தால் தான் கவுரவமா?

இறைவன் படைப்பில் ஆன்’பெண் இரு சாதி மட்டும்தான். ஒவ்வொரு மனிதனுடைய பண்புகள், செயல்கள்’ பழக்கவழக்கங்கள்’ தூய்மை இவைகளை வைத்து மனிதர்களை தீர்மானியுங்கள்

காலம் மாறும்’மாறுகிறது என நம்புவோம்

அன்புடன்
வ.பொ.சு—வயாவிளான் பொன்னம்பலம் சுகந்தன்