ஏழு பூக்காலமும் கையு(யூ)டு பொந்தும்!





<

p style=”text-align: justify;”>எங்கள் மண்ணில் வருடத்துக்கு 

ஏழு வகையான பூக்காலங்கள் உண்டு. நாங்கள்அவசரப்பட்டு நான்காவது அல்லது ஐந்தாவது பூக்காலத்தில் தேன் எடுத்தால் சுவையும் அளவும் குன்றிவிடும்.

காரணம் பல வகையான பூக்களின் சுவையும் கலக்கும் போது பல்சுவை கொண்ட தேவாமுதம் போல 

இருக்கும்.

<

p style=”text-align: justify;”>எங்களுக்கு இந்தக் காட்டில் என்ன என்ன மரங்கள் உண்டு என்பது தெரியும். எந்த மரம் எந்தக் காலத்தில் பூக்கும் என்பதும் பரம்பரை பரம்பரையாகவே தெரியும். 



ஒரு முறை ஓர் மரத்தில் தேன் இருப்பது கண்டுபிடித்து தேன் எடுப்பதாயின் பத்திரமாகவே எடுப்போம்.

<

p style=”text-align: justify;”>தனம் தரும் மரத்தில் விறகுவெட்டி போலவோ அல்லது சிறுபிள்ளைப் போலவோ பொறுப்பு இல்லாமலோ வெட்டிக் கொட்டமாட்டோம். 



ப்பெரியளவில் வெட்டாமல் கை மட்டும் பூரக்கூடிய பொந்து மட்டும் வட்டவடிவில் வெட்டி ஒரு கையை உள்ளே விட்டுத் தேனெடுப்போம். அதை நாங்கள்

 “கையுடு(யூ)டு பொந்து” என்று அழைப்போம்.

<

p style=”text-align: justify;”>முழுமையாக/சுத்தமாக வழித்துத் துடைத்து தேனை எடுக்காது, தேனீக்க க்கும் பொந்தின்

அடியில் சிறிதளவு விட்டுவைப்பதுடன் கத்தியால் அல்லது உளியால் 

வட்ட வடிவமாக வெட்டி எடுக்கப்பட்ட மரத்தின் துண்டினை தேனின் வதை கொண்டே ஒட்டிவிடுவோம்.

<

p style=”text-align: justify;”>இப்போது மரமும் பொந்தும் பார்வைக்கு 

முதல் இருந்தது போலவே காணப்படும். 



அப்படிச் செய்யும் போது அந்த தேனீக்களோ அல்லது வேறு தேனீக் கூட்டமோ தேனின் மணத்தை நாடி 

அவ்விடத்துக்கு வந்து மீண்டும் தமது கூடுகளை அதே இடத்திலேயே அமைக்கும். இதனால் தேனீக்கள் நன்மையடைகின்றன. நாமும் நன்மை அடைகிறோம்.(Win Win Strategy)

இந்தத் தொழிலை இதே வழிமுறையில் 

நாம் பரம்பரை பரம்பரையாகவே செய்து வருகிறோம். 



நான் இப்போது தேனெடுக்கும் மரங்கள் எனது பாட்டன் காலத்தவை. அவரும் தனது பாட்டன் பூட்டன் காலத்து மரங்களையும்

மரப்பொந்துகளையுமே எங்களுக்கு காட்டிச் சென்றுள்ளார்.

<

p style=”text-align: justify;”>தோட்டம் செய்பவர்கள் தோட்டக் காணிகளை சீதனமாகவோ முதிசமாகவோ 

பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள்.



 அதே போல கடற் தொழில் செய்பவர்கள் “பாடுகள்”

என்றழைக்கப்படும் 

கடற்கரையோரக் காணிகளை ஆண் பிள்ளைகளுக்கு கொடுப்பது போலவே நாங்களும் எங்கள் வயதான காலத்தில் 

ஆண் பிள்ளைகளுக்கு இவற்றை காட்டிவிட்டே கண் மூடுவோம்.

<

p style=”text-align: justify;”>எங்களின் குடும்பத்தவர்கள் இந்த மரங்களையும் பொந்துகளையும் வேறு 

குடும்பங்களுக்கோ வேறு

மனிதர்களுக்கோ ஒரு போதும் காண்பிக்க மாட்டோம். 



ஆம், மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட பெரியமடு கிராமத்தின் சிறிய

வைத்தியசாலையில் கடமையில் இருந்த நேரம் தேனெடுக்கும் தொழில் செய்யும் 

90 அகவைகள் தாண்டிய 

ஐயா ஒருவர் Dr.தூயவன் சுந்தரலிங்கத்துக்கும் அடியேனுக்கும் 

சொன்ன காதை இது.

<

p style=”text-align: justify;”>



இயற்கை அன்னைக்கும் அந்த முதியவருக்குமான காதல் எங்களை வியக்க வைத்தது. 



நிற்க,


தேனீக்களின் பங்கு எமக்குத் தேனைத்(Honey is also known as Liquid Gold)தருவதுடன் நிற்பதில்லை. 
தாவரங்களில் மகரந்தச் சேர்க்கைக்கும்(Pollination) பேருதவி புரிந்து வருகிறது.

ஆண் பூவிலுள்ள மகரந்தத்தை(Pollen)பெண் பூவில் சேர்க்கும் போதே அவை கருவுற்று (Fertilization) காய்கள்உருவாகி பழங்கள் உருவாகி அடுத்த சந்ததிக்கான விதைகள் உருவாகின்றன. பச்சையத்தையும் சூரிய ஒளியையும் கொண்டு உணவைத் தயாரிக்கும் தாவரங்களே மனிதன் உட்பட விலங்குகளையும் இப் பூவுலகில் வாழவைப்பவை ஆகும்.

<

p style=”text-align: justify;”>
வண்ணத்துப் பூச்சி உட்பட்ட பூச்சிகளும்
 வண்டினங்களும் தாவரங்களின்
 மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறன. ஆனால் உலகில்
3/4 பங்கு தாவரங்களில் அல்லது பயிர்களில் மகரந்தச் சேர்க்கையை தேனீக்களே செய்கின்றன. 

BEES POLLINATE 3/4 OF THE CROP SPECIES GROWN IN THE WORLD!

<

p style=”text-align: justify;”>


மகரந்தச் சேர்க்கைக்கு பேருதவி புரியும் தேனீக்கள்தான் இப் பூவுலகில் தாவர இராச்சியத்தின் இருப்பை உறுதி செய்கிறது. 
தாவர இராச்சியத்தில் (Plant Kingdom) மகரந்தச் சேர்க்கை இல்லையேல் விலங்கு இராச்சியமும் பூவுலகில் இல்லை.

“தமிழீழ பொருன்மிய மேம்பாட்டு நிறுவனம் R.O.O.T (Research Organizations Of Tamil Eelam) என்ற பெயரில் இயங்கிவந்த 1980களின் மதியத்தில் இருந்தே தேனீ வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தது.”

“அந்தக் காலத்தில் நாங்களும் ஓர் உற்சாகத்துடன் தமிழீழ பொருன்மிய மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழர் தேசத்தின் உட்கட்டுமானத்தை (Infrastructure of Tamil Eelam) நிர்மானித்தோம்” என அண்மையில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் என்னிடம் ஆதங்கப்பட்டதுடன் தன் கவலையை வெளியிட்டார்.

<

p style=”text-align: justify;”>
சுழிபுரத்துச் சிறுமி உட்பட எத்தனையோ பிள்ளைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் சிங்கள தேசம் தமிழர்தேசத்தில் உள்ள தேனீக்களையா பாதுகாக்கப் போகிறது என எண்ணிக் கொண்டேன்.



தொடரும்…

நன்றி

-வயவையூர் அறத்தலைவன்-