கலையரசியான வயவையூரின் இன்னொரு கலைமுத்து எழிலினி.

793

பரந்து விரிந்த தமிழ்த்தேசியம் தற்காலிக பின்னடைவுகளை கண்டு நிற்கும் இன்றைய காலப்பொழுதிலும் நிமிர்ந்து நிற்கிறது அதன் சில கட்டமைப்புக்கள்.

பலமான தமிழ்த்தேசியக் கட்டமைப்புக்கள் விடுதலைச் சூரியனாக பிரகாசிக்கும் போது தூசுகள்,மாசுகள் அவற்றை மூடிவிடமுடியாது.

“தமிழர்_கல்வி_மேம்பாட்டுப்_பேரவை”
அவ்வாறான பலமான கட்டமைப்புக்களில் தலையாயது எனக் கூறின் அது மிகையாகாது.

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பிரித்தானியக் கிளை 90 இற்கு மேற்பட்ட பள்ளிகளையும் 7500 மாணவர்களையும் 700 ஆசிரியர்களையும் தன் மடியில் உள்ளடக்கி தமிழ்த்தேசியத்தின் பாரிய பலமான கட்டமைப்பாக விளங்குகிறது.

இந்த உயர்ந்த பணியை செய்து வரும் பள்ளிகளில் தனிநாயகம் தமிழ்ப்பள்ளியின் கலை நிகழ்வொன்றை பார்க்கும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது.

கண்ணையும் செவியையும் கவர்ந்து அவற்றின் வாயிலாக மனதிற்கு இன்பம் ஊட்டும் கலை கவின்கலை ஆகும்.

காற்சிலம்புடன் கண்ணகியாக கண்ணகி வழிபாட்டில் சிறந்து விளங்கும் வயவையூரின் அமரர் க. தருமதுரை அவர்களின் பேத்தி எழிலினி வந்தாள்.

கலாநிதி.க.சிதம்பரநாதன் அவர்களின் நாடகங்களின் தரத்தில் இருந்ததாக எனக்குப் பக்கத்திலிருந்தவர் பாராட்டிய போது நாடக நெறியாள்கை செய்த ஆசிரியர் பூரித்துப் போனார்.

மாணவர்களை, ஆசிரியர்களை, பெற்றோரை உற்சாகப்படுத்தவே அந்தப் பெருந்தகை இவ்வாறு சொல்கிறார் என்று ஒரு கணம் நினைத்தாலும், சொன்னவுடன் எனது மனதிலும் ஒரு முறை “மண் சுமந்த மேனியர்” நாடகம் நிழலாடியது.

ஆம்!

கலைகளை கவின்கலை என்றும் பயன்தருகலை என்றும் வகுத்துக் கூறுவர் பாரினில் பல காலம் பண்பட்ட தமிழர்.🖌

நன்றி

வயவையூர் அறத்தலைவன்