சூறையாடப்படும் தமிழர் சுவடு

எனக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா?!

எங்களுக்கு நீதி சொல்ல. 
எவரும் இல்லையா……???

மாங்கனித்தீவு எங்கும் வெற்பை அசைத்த எங்கள் மாமன்னன் இராவணன் தொடர்பான பற்பல இடங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

மாமன்னன் இராவணன் சுவடுகளில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இரண்டு இடங்கள் மிகவும் முக்கியமானவை.

முதன்மையானது இராவணன் வெட்டு மற்றையது கன்னியா வெந்நீரூற்று. 

சிவபக்தனான மாமன்னன் தனது தாயார் இறந்த போது பிதிர்க்கடன் செய்வதற்காக வெட்டியவைதான் திருகோணமலையில் உள்ள கன்னியா வெந்நீரூற்று கிணறுகள் ஆகும்.

 புனிதம் நிரம்பிய அந்தக் கிணறுகளில்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ்குடிகள் நேற்று வரை தங்கள் முந்தையரின் பிதிர்க்கடன்களை செய்து வந்தனர்.

 

வடக்கே உள்ள சைவத் தமிழர்கள் கீரிமலையில் உள்ள நகுலேச்சரத்தில் பிதிர்க்கடனைச் செய்வது கால காலமாகத் தொடர்கிறது. இடையில் சில ஆண்டுகள் அந்த அடிப்படை உரிமை கூட உயர்பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பகுதி(High Security Zone) என மறுக்கப்பட்டிருந்தது. பின் கடும் பிரயத்தனம் மூலம் நீங்கியது.

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தமிழர்களுக்கான அந்த அடிப்படை உரிமை (Fundamental Rights)இன்று முற்று முழுதாக மறுக்கப்பட்டுள்ளது.

புனிதம் நிரம்பிய அந்த இடத்தை அசுத்தம் செய்கிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி அந்த உரிமை மறுக்கப்பட்டு மிதிக்கப்பட்டுள்ளது. 


2009 ஆம் ஆண்டு ஆயுதப்போரில் வென்ற பின்னர் மிக மோசமாக எங்கள் தொல் காலச் சுவடுகளை அங்கேயும் அழிக்கப்பட்டு வருகிறது.

நுழைவுச் சீட்டிலேயே கன்னியா வெந்நீரூற்று அனுராதபுரக் காலத்துக்கு உரியவை என்று ஆங்கிலத்தில் எழுதி வெளிநாட்டு, உள்நாட்டு மக்களுக்கு அழகழகாய்ப் பொய் சொல்லப்படுகிறது.

(Kanniya Hot Spring Wells have been Anuradhapura period and it was situated at a Buddhist religion premises proved by archeological evidences) 

2009 ஆம் ஆண்டு அச்சிடப்படட நுழைவுச் சீட்டையும் இன்றைய(2018ஆம் ஆண்டு) நுழைவுச் சீட்டையும் பார்த்தாலே போதும் உள்ளே நீங்கள் நுழைந்து பார்க்கத் தேவை இல்லை.

According to Article 14 (1) (f) of the Constitution of Sri Lanka stated “Every citizen is entitled to the freedom by himself or in association with others to enjoy and promote his own culture”. 

So,No one can deny Our/Tamils Fundamental Rights in Our Homeland!

நன்றி

– வயவையூர் அறத்தலைவன் –