சாதாரண நீர்வாழ் உயிரிதான் ஆனால் கூர்ந்து பார்த்த போதுதான் (இரண்டாவது படத்தில்)பாறையின் மீது ஆமை இருப்பது தெரிந்தது!
உயிரியின் உருமறைப்புக்காக முதுகில் பாசியையும் படரவிட்ட இறைவன் கூட ஓர் கொரில்லா போராளிதான்!
1991ஆம் ஆனையிறவுப் போரில் வெட்டைவெளிகளில் சென்று காயமடைந்தவர்களை மீட்ட வாகனங்கள் பச்சிலைகளை கொண்ட மரக்கொப்புக்களால் உருமறைப்புச் செய்யப்படடன.
கழுகுக் கண்களுடன் வானத்தில் வடடமிடும் இயந்திரப்பறவைகளுக்கு தமிழர்கள் தண்ணி காட்டிட எடுத்த முயற்சிதான் அது!
அதிகம் அதிகம் இலைகள் கொண்ட வாகனங்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு காயமடைந்தவர்களை ஏற்றி வந்து கொண்டிருந்தன.
ஆகாயத்திலிருந்து அவதானித்த விமானப்படையினன் ஆச்சரியத்தால் அதிர்ந்து போனானாம்.
ஆம்,நகரும் மரங்களை பார்த்தால் அதிர்ச்சி வரத்தானே செய்யும்!😂
கொரில்லாப் போராட்ட முறையிலிருந்து மரபுவழி போராட்ட இராணுவமாக மாறிக்கொண்டிருந்த நாட்களில் நடைபெற்ற உருமறைப்புத் தவறுகள் என்று இவற்றைச் சொல்லலாம்.
பின்னாட்களில் ஆங்கில அறிவு அதிகம் கொண்ட விமானப்படைத் தளபதி கேணல் சங்கர்,பிரிகேடியர் சசிகுமார், தென்தமிழீழப் படைத்துறை ஆலோசகர் மனோமாஸ்டர் மற்றும் தினேஷ் மாஸ்டர், சுசீலன் அண்ணர் போன்றோர்.
ஆங்கிலப் புத்தகங்களை அதிகம் அதிகம் வாசித்து யோசித்து எங்களது பூகோள அமைப்பு, காலநிலை, தட்பவெட்பம் போன்றவருக்கு ஏற்ப நவீன படைதுறைப் பாடத்திட்டங்களை வரைந்தனர்.🌳
அம்பும் வில்லுடனும் 🏹 இருந்த தமிழர்தம் படைத்துறை அறிவைப் பெருக்குவதற்கு தலைவரின் தலைமையில் தமிழினம் எடுத்த முயற்சிகளையும் வார்த்தைகளில் வடிக்கமுடியாது. 🏹
புலத்தில் வாழ்ந்த எங்கள் மக்கள் பணத்துடன் நல்ல புத்தகங்களையும் வாங்கி அனுப்பினர்.
பெரிய பெரிய புத்தகங்களை தாம் வாழும் நாடுகளில் வாங்கி அவற்றை ஒற்றை ஒற்றையாக பிரித்து தபால்களில் ஒவ்வொன்றாக அனுப்பிய வரலாறை ஓர் நண்பர் அண்மையில் பகிர்ந்து கொண்டார்.🦋
போராளிகளுக்கு பக்குவமாக அவர்களுக்கு இலகுவில் விளங்கக் கூடிய முறையில் மேலதிக அறிவூட்டி வந்தார்கள்.👑
“உருமறைப்பு/Camouflage”, “தந்திரோபாயங்களும் மூலோபயங்களும்/Tactics and Strategy of war ” ,Survival சம்பந்தமான அவர்கள் வரைந்த புத்தகங்கள் இன்றும் எம்மண்ணில் இருக்கும் என்றே நம்புகிறேன்!