தமிழை தமிழாய்க் கற்போம் 3

இந்து ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றான உருதுமொழிச் சொற்களும் தமிழில் கலந்திருக்கின்றன. இம்மொழி பாக்கிஸ்தானில் அரச கரும மொழியாகவும் இந்தியாவின் முக்கிய மொழிகளில் ஒன்றாகவும் இருப்பதுடன் கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே உருவாக்கமும் பெற்றதாகும்.

இம்மொழிச் சொற்கள் பெருமளவில் தமிழில் இருந்த போதும் கூடுதலாகப் பயன்படுத்தும் சில சொற்களைக் கீழே காண்போம்.

உருது தமிழ்
சோக்கு பகட்டு
தபால் அஞ்சல்
தமாஷ் வேடிக்கை
தயார் அணியம்
தரப்பு பக்கம்
தாசில்தாரர் வட்டாட்சியாளர்
தாயத்து சுருள்தகடு
திவான் அரசிறை அதிகாரி
நபர் ஆள்
நாசூக்கு அழகு, நயத்திறன்
பங்களா வளமனை
பட்டுவாடா கணக்குத்தீர்ப்பு
பதில் விடை
பதிலி மாற்று
பந்தோபஸ்த்து காவல்
பயில்வான் மல்லன்
பரவாய் தாழ்வு
பிச்சுவா கையீட்டி
பீடி இலைச்சுருள்
புகார் முறையீடு
பேக்கு மடையன்
பேட்டி நேருரை
பேஷ் மிகநன்று
மகால் அரண்மனை
மசூதி பள்ளிவாசல்
மசோதா சட்டவரைபு
மாகாணம் மாநிலம்
மாஜி முந்தின
மவுசு கவர்ச்சி
ரகம் வகை
லத்தி குறுந்தடி
வசூல் தொகுத்தல்
வாபஸ் திரும்பப்பெறல்
வாய்தா தவணை
வாரிசு மரபுரிமையாளர்
விலாவரி முழுவிளக்கம்