இருகரம் கூப்பி வணக்கம் சொல்வதின் நன்மைகள்

தமிழர்களாகிய நாங்கள் ஒருவரைச் சந்திக்கும் போதும், ஒருவரை வரவேற்கும் போதும், சந்தித்து முடிந்து விடை பெறும் போதும், நன்றி தெரிவிக்கும் போதும் இரு கரங்களையும் கூப்பி வணக்கம் சொல்வது வழக்கம். இது எங்கள் பண்பாடும் கூட.

இவ்வாறு இரு கரங்களைக் கூப்பும் போது, உள்ளங்கை மற்றும் விரல்களில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் உள்ளங்கையிலும் விரலிலும் உள்ள நரம்புகள் தூண்டப்படுகின்றன.

இவ்வாறு தூண்டப்படும் போது ஞாபக சக்தி அதிகரிக்கும். இதனால் நாம் சந்திக்கும் நபரையும், உரையாடிய விடயங்களையும் ஞாபகத்தில் வைக்க முடியும். இந்த அவசர உலகில் ஞாபகசக்தி எவ்வளவு முக்கியம் என்று எல்லாருக்கும் தெரியும்தானே..

கை குலுக்கும் போதும் இப்படித்தானே நடக்கும் என்று உங்களுக்குத் தோன்றலாம். கை குலுக்கும் போது மொத்தம் இரு கைகள். கரம் கூப்பி வணக்கம் சொன்னால் மொத்தம் நாலு கைகள். எதனால் ஞாபக சக்தி கூடும்? அதை விட கை குலுக்கும் போது கிருமித் தொற்று ஏற்படலாம். வணக்கம் அஒல்லும் போது அப்படி நிகழாது.

எங்கள் மூதாதையர் எவ்வளவு பெரிய விஞ்ஞானவாதிகள் பார்த்தீர்களா. எனவே எல்லாரும் இருகரம் கூப்பி வணக்கம் நன்றி சொல்லுவோம். நம் பண்பாட்டைக் காப்போம்.