தோட்டா சுமந்து சுமந்து…
தோடு துறந்து,
பொட்டோடு பூவையும் துறந்து,
எண்ணமெல்லாம் ஈழக் கனவுதனைச் சுவைத்துச் சுவைத்து
சுமந்து சுமந்து…
கன்னமெல்லாம்
கண்ணனின் வண்ணம் பூசி (for camouflage)
களமாடி கல்லறைகளில் தூங்கும் எம் அரியாத்தைகளை ஒரு கணம் நினைந்து பணிந்து
நிமிர்ந்து வாழ்த்துவோம் மாதரை!