கலைஞர் – 95

775

காயங்களின் வலிகளுடன் கலைஞரோடு பொருதினாலும், தமிழால் அவரை விரும்ப முடிகிறது.

King Of Multi Tasking = கலைஞர். எவராலும் மறுக்க முடியாது.

முத்தமிழ் அறிஞர் என்றாலும் அவருடைய மேதமையும் புலமையும் பாமரனின் பாதங்களைத் தொடாமல் இருந்ததில்லை.

கூற வேண்டியதை கூற வேண்டிய நபரின் காதுவரை குனிந்தோ உயர்ந்தோ கூறி விடுவதில் வல்லவர்.

விதவை என்றால் பொட்டில்லை. கைப்பெண் என்றால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு என்று பெண்மூடத்துவத்தை தமிழால் உடைத்தவர்.

மாபெரும் இலக்கியவாதியாக இருந்தாலும் மக்களுக்காக “திரை இலக்கிய” நிலைக்கு இறங்கி சீர்திருத்தக் கருத்துகளை விதைத்தவர்.

தொன்மைத் தமிழ் மரபுகளை புதுமையுடன் புதிய தலை முறைக்கு அளித்தவர்.

இவ்வாறு அடுக்க நிறைய உண்டு.. கருத்து முறிவுகள் உண்டானாலும் வாழ்த்தத்தான் சொல்லும்.

95…  பிறப்பால் உங்கள் அகவை அது.. தமிழ் தொண்டாலும் மக்கள் சேவையாலும் உங்கள் அகவை இன்னும் அதிகம்.

தமிழ் வாழட்டும்.