ஆக்கம் – பசீலன்
தமிழர்களின், அப்பழுக்கற்ற
தலைமகனை
தம் இதயத்தில்
சுமக்க
ஆர்வம் கொண்ட
எந்தவொரு மனிதருமே
தம் வாழ்வை அர்த்தமற்று வாழ்ந்து முடிக்க விரும்பியதில்லை.
அந்த தலைமகனை நேசிக்க தொடங்கிவிட்டாலே
தமிழ்ப்பற்றும்,
விடுதலையுணர்வும், ஓயாத உழைப்பும்,
அர்ப்பணிப்பு, ஆளுமைத்திறமை
மற்றும்
தம் மக்களுக்காக
உயிர்த்தியாகம் செய்யும் பெருவிருப்பு
உட்பட்ட
அநேக
பண்புகள் இயல்பாகவே வந்துவிடும்.
மற்றவர் முன்னால்
வெறும்
சாமானியர்களாக
இருந்த
பல ஆண்களும்
பெண்களும்
பெரும்
சரித்திரத்தை
படைத்ததன்
அடிப்படைச் சூத்திரமே
அதுதான்.
……………….
இங்கே,
தன் மக்களுக்காக
கடவுளிடம்
பரிந்து பேசும்
பணிக்காக
துறவியான
இந்த பெரியார்,
தான் விசுவாசித்த,
அவர் நேசித்த
கடவுளைப்போன்றே
தமிழர்களின்
தலைமகனையும்,
தமிழின விடுதலையையும்
நேசித்தார்.
அதற்காக
ஓயாமல் உழைத்தார்.
அதனால்
ஒடுக்கப்பட்ட மக்களின்
இதயங்களில்
அவர்
ஒரு விடுதலைப் போராளியாக
வீற்றிருக்கின்றார்.
தமிழரின்
விடுதலைக்காக உழைத்து
அதற்காகவே
தன்
உயிரை தியாகம் செய்த
ஆயுதம் ஏந்தாத,
சீருடை தரிக்காத
விடுதலைப் போராளியாக
தமிழர்களின்
மனங்களில்
என்றும்
நிறைந்திருக்கும்
தந்தையே
உங்கள் ஆன்மா
இளைப்பாற கடவட்டும்.