வானத்தைப் பார்த்தேன்

ஆதியில் அறிவியல் ஆரம்பித்ததும் வானத்தைப் பார்த்துதான். ஆதியன் அண்ணாந்து வானம் பார்த்தான். அங்கே சில நிரந்தரங்கள் – சில மாற்றங்கள் இவற்றின் கலவையைப் பார்த்தான். கண்ணுக்குப் புலப்பட்ட 4000த்துச் சொச்ச நட்சத்திரங்கள் நினைவில் நிற்கும்படி நிரந்தர வடிவங்களில் நித்தமும் தோன்றக் கண்டான். இந்த மாறாப் பின்னணித் திரையில் ஏழு நடிகர்கள் இப்படியும் அப்படியும் கலாய்ப்பாய் நடமாடக் கண்டான். எழுவரில் இருவர் வட்டத் தட்டுகள் – சூரியன், நிலா. வான மேடையில் ஒரு பாதை போட்டு வைத்துக்கொண்டு இவர்கள் … Continue reading வானத்தைப் பார்த்தேன்