கட்டகாமத்துக் கிழவி கதிர்காமம் போன
கதை மாதிரி"...எனச்
செப்பிடும் வழக்கம் செந்தமிழரெம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்டு.
ஆம்,
வடக்கே யாழ்ப்பாணம் முதல் கிழக்கே அம்பாறை வரையான மக்கள்
கட்டகாமம் எனும் தொல்லூரைத் தாண்டியே கதிர்காமக் கந்தனில் திருத்தலத்திற்கு யாத்திரைக்குச் செல்வதுண்டு.
ஆடிவேல் கொண்டாடப்படும் காலத்தில் இந்த மக்கள் எல்லோருமே நீண்ட வரிசை வரிசையாக வருடா வருடம் பாதயாத்திரை செல்லும் போது கதிர்காமத்துக்கு மிக அருகில் உள்ள "#கட்டகாமம்" எனும் அந்த அம்மாவின் சொந்த ஊரை ஊடறுத்துத்தான் செல்வதுண்டு.
தேனூறும் தேவார திருவாசகப் பாடல் கலை ஓதிக் கொண்டு செல்லும் ஒவ்வொரு தடவையும்...
உன்னத வீரர்கள் எதிரிக்கு நெருக்கமாய் நின்று சன்னதமாடிய
அந்த வெங்களத்தை சன்னங்கள்
சல்லடை போட்டுக் கொண்டிருந்தன.
ஆட்லெறிகள் ஆர்ப்பரித்தன.
அஞ்சிஞ்சி வகை எறிகணைகள் இஞ்சிக்கு இஞ்சி வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தன.
இயந்திர யானைகள் ( யுத்தராங்கிகள் ) ஈழதேசமே அதிரப் பிளிறிக் கொண்டிருந்தன.
தலைக்கு மேலே இசுரேலிய மற்றும் உக்ரைன் தயாரிக்கு இயந்திர வல்லூறுகள் சுற்றிச் சுற்றியே குண்டுகள் பொழிந்து கொண்டிருந்தன.
நெருப்பினை உமிழ்ந்த
அத்தனை இரும்புத் துண்டுகளும் ஈழ அன்னையின் உடலையும் அவள் அன்புக்குரிய வீரக்குழந்தைகளின் உடல்களையும் சல்லடை போட்டுக் கொண்டிருந்தன.
அந்தக் கொடிய நேரம்தான்...இது நடந்தது.
ஆம்,
முன்னங்காலுடன் குருதிக் குழாய் முற்று முழுதாய்...
ஆட்லெறிகள் ஆர்ப்பரித்த சண்டைக் காலத்தில்,...
"சல்லியர்" எமக்கும் விழுப்புண் ஏற்ற எமது வீரர்களினதும் ஒரு நேர ஆகாரமாகியே எமது இளவயதின் கொடும்பசி போக்கிய முதலிப்பழம்! 👆
அடர் அடவிகளும் அருவிகளும் சூழ்ந்த "மணலாறு" எனும் தமிழ்ரெம் இதயபூமியில்,...
"கனலாறு" பாய்ந்து கொண்டிந்த,....காலத்து
"வரலாறு" முழுமையாக எழுதப்படுமாயின்
இந்தப் பழமும் ஆங்கு இடம்பிடிக்கும்!
"ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர்!"
எனும் புதுவைக் கவிஞரின் வரிகளில் இடம் பிடிக்கும் உலுவிந்தம் பழம் போலவே,
இந்தப் முதலி(ளி)ப்பழமும் தமிழர்தம் விடுதலைப் போராட்டத்தின் வரலாறுதனில் இடம்பிடித்து வடம் பிடிக்கும்!!!
"நான் வயதானவன்,என்னால இந்தச் சமூகத்துக்கு இனி பலன் ஏதும் இல்லை."
என்னை விட்டிட்டு சின்னப் பிள்ளைகளைக் காப்பாத்துங்கோ"
26/01/2009 அன்று காயமடைந்து உடையார்கட்டு இடப்பெயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருமிகு வே.பாலகுமார் அவர்களின் திருவாய் உதிர்த்த வசனங்கள் இவை!
கையிலும் பழுவிலும் அவருக்குக்
காயம் ஏற்பட்டிருந்தது.
கையில் என்பு முறிவினால் ( compound fracture of forearm bone) ஏற்பட்ட கடுமையான வேதனையையும் தாண்டி தெளிவாக கதைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர்.
அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக விட்டுவிடமுடியுமா?
குன்றாத விடுதலை வேட்கை கொண்ட பெருமதிப்புக்குரியவரை
Dr.குயின்ரஷ் ஜீவன் இமானுவேல்,...
https://youtu.be/MIsnf4UwTCE?feature=shared
எந்தை தனக்கென ஒரு எழுத்து நடையினை வைத்திருந்தார்!
எழுத்தறிவிக்கும் ஆசானாகத் தனது முதலாவது தொழிலைத் தொடங்கிய அவர் எப்போதும் ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பார்!
"அறத்தலைவன்" எனும் பெயரில் அவர் வீரகேசரியிலும் அந்தக் காலத்து ஈழத்துச் சஞ்சிகைகளிலும் எழுதிய கவிதைகள், கட்டுரைகள் தொடர்பான விடையத்தினை அப்பா இறந்து பின்னரே பாவி யான் ஆழமாய் அறிந்தேன்!
அப்பாவின் நினைவு மலரை யான் எழுதிக் கொண்டிருந்த போதே எந்தன் அம்மா அது குறித்துச் சொன்னார்!
அதென்ன 'அறத்தலைவன்'?
அந்தப் புனைபெயர் ஏன் உருவானது? யார் உருவாக்கியது என அம்மாவிடமே யான் கேட்டேன்.
"தருமதுரை" எனும்...
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தகுதியை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்ற ஆசையுடனேயே பலவிதத்தில் முயற்சி செய்து முன்னேறி வருகின்றான். ஆனால் பலவழிகளில் முயற்சி செய்து இந்தச் சமூகத்தின் உயர்வைக் காணவேண்டும் என்பதற்காக அயராது உழைப்பவனே உண்மையான தகுதியுடைய மனிதன்.
அந்தத் தகுதிக்குள்ளேயே அவனின் தரம், குணம், திடம் என்ற மூன்றும் முழுமையாக நிறைந்துள்ளது. முடிவுகளை எடுத்தல், மற்றவர்களுடன் கதைக்கும் தன்மைகள், பிரயோகிக்கும் வார்த்தைகளின் தரம், தொலைநோக்குப் பார்வை என அவனின் குணம் எத்தருணத்திலும் தளம்பாமல் மாறாதிருக்கும்.
அதேபோல அவனின் நிலை உயர்ந்தாலும் , தாழ்ந்தாலும் தாராள குணமான அன்பு,...
அன்பான வேண்டுகோள்:
https://youtu.be/yxOd5aJEOUs?si=5WxHwcsy1vBjRKLL
ஈழம் சினிமாச் செயற்பாடுகள் சாரந்தும் தேச அரசியல் செயற்பாடுகள் சார்ந்தும் சமூக வலைத்தளம் எமக்கு தவிர்க்க முடியாத்தும் மிகவும் அத்தியாவசியமானதுமான தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அந்த வகையில் பலமான வலைத்தளக் கட்டமைப்பு ஒன்றுக்குள் எமது மக்களை உள்வாங்கும் முயற்சியாக ஆரோக்கியமானதும் அறம் சாரந்ததுமான மகிழ்வூட்டல் படைப்புகளை முதற்கட்டமாக தயாரித்து வெளியிடும் பணியில் நாம் மும்மரமாக இறங்கிச் செயற்பட்டு வருகிறோம்.
அதன் ஒரு முயற்சியாக நாட்டார் பாடல்கள், சிறுவர் பாடல்கள், ஈழத்துப் பாடல்கள், (எதிர் காலத்தில்) விடுதலைப் பாடல்களை இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபல்யப்படுத்தும்...
எங்கள் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரச உத்தியோகத்தினை தூக்கி எறிந்துவிட்டு போராட்டக்களத்தில் குதித்தவர்களில் திரு.கரிகாலன் அவர்களும் ஒருவர் ஆவார்!
மீனகங்களையும் தேனகங்களையும் தன்னகத்தே கொண்டு தனித்துவமாக இலங்கும் எங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் "களுவாஞ்சிக்குடி" எனும் தொல்லூரில் அவதரித்தவர்தான் இந்தக் கரிகாலன்.
தனது நீண்ட நெடிய போராட்ட வாழ்வில் அம்பாறை மாவட்டத்தின் அழிக்கம்பை முதல் அளவெட்டி வரை எமது மக்களுக்கு இந்த விடுதலை வீரன் செய்த உன்னத பணிகள் எண்ணில் அடங்காதவை.
அஃதே,
இளைய போராளிகளாகிய எங்களுக்கும் இவர் ஆற்றியவை அளப்பரியவை ஆகும்.
தமிழீழ விடுதலைப் போரின் முதுகெலுப்பாக விளங்கிய பல...
தலைவர் இல்லை என்ற
எண்ணத்தில்,....
குடாரப்பு கூட்டுஆளுமையும்,
திலீபஅர்ப்பணிப்பும்
கைநழுவிடக் கூடாது,
நமக்குள் மனம்விட்டு பரிசீலிக்வேண்டிய
பல்லாயிரம் உயிர் முடிச்சுக்கள் உண்டு,
திமிராய் எழவேண்டிய
களத்தில்என்னால், நம்மால் எழமுடிந்ததா இல்லையே?
வைராக்கியம் கொண்டு
காப்பாற்ற வேண்டிய தருணத்தை நழுவவிட்ட கூச்ச உணர்வு, என்னை,நம்மை எச்சரித்து விழிப்படையச் செய்யவேண்டாமா?.
குப்பி, தகட்டை தொலைத்துவிட்டு
விசிலடி வீறாப்பு நமக்கு எதற்கு?
நிமிர்ந்து தீர்மானிக்க வேண்டிய தருணங்களில்
மில்லரும் ,
அங்கயற்கண்ணியும்
நினைவிற்கு வரவில்லை,
சரி,போகட்டும்..
உலகப்பரப்பெங்கும்
கூடிக்குரல்கொடுத்த நம் மக்களை,
சங்கம்,கழகம்
அமைத்து பங்குபோட்டு,
கூட்டுவலியை பொறுப்பாசை எனும் குறுக்கு வாய்க்கால்வழி
மடைமாற்றி....
அவர் இல்லை என்றதும்,
உரிமை கோரல் உளறல்
கொஞ்சம் அதிகம்தான்.
ஏனய்யா இது?
யாரைத் திருப்திப்படுத்த?
முள்ளிவாய்க்காலில் இருந்து கரையேறிய நம்
கால்களும்,கைகளும்
ஓரணியில்
ஓர்மனதாய்,
ஒரேபுள்ளியில்
உருத்திரண்டு நின்று.
ஆயிரம் சிட்டிகள்,
ஆயிரம் திரிகள்,
ஆயிரமாயிரம் ஒளிதீபம் கொண்டும்,
திருவுருவப் படத்தின்முன்னால் நின்று கொண்டும்,
அணையா...
CNN விளைவு என்றால் என்ன..?
ஆனையிறவுச் சண்டை நடந்துகொண்டிருந்த காலத்தில், எனக்குப்பழக்கமான ஒரு மேலைத்தேயப் படையதிகாரிக்கு புலோப்பளைச் சண்டைக் காட்சியைப் போட்டுக்காட்டினேன்.
இதற்குச் சிலமாதங்களுக்கு முன்னர்தான் அவர் ஆனையிறவுச் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு " அது ஒரு அசைக்கமுடியாத கோட்டை" என என்னிடம் கூறியிருந்தார். இத்தாவிலில் நிலை கொண்டிருந்த பால்ராஜின் படையோடு, சிறிலங்காவின் 53 வது பிரிவின் படைகளைத் திரும்பத்திரும்ப மோதவிட்டு, தமது ஆள்வலுவைச் சிறிலங்காவின் படைத்தளபதிகள் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என அந்த மேலைத்தேய இராணுவ அதிகாரி கவலைப்பட்டார். (ஏனெனில் 53.வது படைப்பிரிவை வளர்த்தெடுக்க அவரது நாடு...