ஞாபகத் தொட்டில் – சிறுபறவை தீண்டிய உருமறைப்புக் குழந்தை

சிறுபறவையின் உருமறைப்பு தந்த ஞாபகம் – 01

தமிழர்களின் பெரும்பாலான கலைகள் பழம்பெருமை வாய்ந்தவை!

புதிதாக ஈழத்தமிழர்கள் கற்றுக்கொண்ட கலை உருமறைப்புக்கலை!

தம்மை சாதாரணமாக உருமறைத்து,பரண் அமைத்து மிருகங்களை வேட்டையாடிய தமிழர்கள், இயந்திரப்பறவைகளிடம் இருந்து தம்மை பாதுகாக்க பெருமளவு உருமறைப்பையும் கற்றுக்கொண்டனர்.

முப்பது ஆண்டுகாலப்போரில் வான் வழி வேவுகளும் விமானத் தாக்குதல்களும் ஆரம்பித்த பின்னர் தமிழர்கள் மேலதிகமாக”உருமறைப்புக்கலை”யையும் கற்றுக்கொண்டனர்.

எட்டு வீட்டிற்கு பெருமளவில் சமையல் செய்து கொண்டிருந்த போது வெளிவந்த புகைகண்டு பகைதாக்கிய கசப்பான சம்பவங்களும் தமிழர் நிலத்தில் நடந்தேறியது.

அன்றிலிருந்து சாதாரண பொது மக்களும் “உருமறைப்புக்கலை”யையும் அழமாகக் கற்றுக் கொண்டனர்