வயாவிளான் ஞானவைரவர் ஆலய பூசை வழிபாடு

480

கால் நூற்றாண்டுக்கு மேலாக இராணுவத்தின் பிடியில் இருந்த வயவையின் தென் பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஞானவைரவர் ஆலயமும் அதனை அண்டியபகுதிகளும் சிரமதானம் செய்யப்பட்டன. சிரமதானம் முடிந்த கையோடு ஞானவைரவர் ஆலய திருத்த வேலைகளை முடுக்கி விட முடிவு செய்யப்பட்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வெள்ளி தோறும் மாலை மூன்று மணிக்கு பூசை வழிபாடு நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் முதலாவது பூசை கடந்த 31/08/2018 அன்று மாலை மூன்று மணிக்கு நடைபெற்றது.

கணிசமான அளவு மக்கள் பூசை வழிபாட்டில் கலந்து கொண்டனர். பூசைக்குத் தேவையான பால், பழம், பூ போன்றவற்றை வைரவப் பெருமானுக்கு வழங்கி, ஆர்வத்துடனும் பக்திப் பரவசத்துடனும் அடியார்கள் பூசையில் கலந்து கொண்டார்கள்.

பல்லாண்டுகளின் பின் நடைபெற்ற பூசை ஆதலால்  ஆலய வளாகம் ஆனந்த பக்திப் பரவச வெள்ளத்தில் மிதந்தது. வயவையூருக்கு விடிவு கிட்டும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தியது.