கோமாளி மீன்(Clownfish)

கோமாளி மீன்(Clownfish) 🤡 🐠என்று அழைக்கப்படும் இவரின் வாழிடம் இந்து  மற்றும் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள பவளப்பாறைகள்/Coral reef ஆகும்.
தென் பசுபிக் சமுத்திரத்தில் அதிகரித்துவரும் வெப்பம் கோமாளி மீன்களின் (Clownfish) வாழிடங்களைப் பாதித்து வருவதாக இன்று பத்திரிகையில் பார்த்த சேதி இன்னுமோர் பாசிபடர்ந்த பசுமைமிகு நினைவை அழைத்து வந்தது.
(Warmer seas in the South Pacific are affecting the habitat of the clownfish, which inspired the Disney film.)
ஆம்,2003 இல் வெளிவந்த ‘Finding Nemo’ என்ற ஆங்கிலப் படத்தை “நீமோவைத் தேடி” என்ற பெயரில் அருமையாகத் தமிழாக்கம் செய்து தந்திருந்தார்கள் தமிழீழ தமிழாக்கப்பிரிவினர்.
அந்தத் திரைப்படத்தில் தந்தையும் மகனும் என இரண்டு முக்கிய வேடங்களில் இந்த கோமாளி மீன்கள் நடித்துள்ளன. (All animated characters)
மார்லின்(Marlin)என்ற தந்தை மீன் தன்னரும் சகியையும் பிள்ளைகளையும் சீலா மீனுக்கு இரையாகக் கொடுத்து “நீமோ” என்ற ஒரே ஒரு பிள்ளையை கண்ணாக காத்து வருபவர். நீமோ வளர்ந்து பள்ளிப் பருவம் எய்தியதும் பள்ளிக்கு அனுப்பவேண்டி ஏற்பட்டது.
புத்திமதிகள் பல புகட்டி பாடசாலைக்கு முதன் நாள் பக்குவமாய் அனுப்பி வைக்கிறார். இளவல் நீமோ கட்டுப்பாடுகளை மீறி உல்லாசமாகச் சிறகு விரித்த போது மனிதர்களின் கைகளில் சிக்கி ஈற்றில் பல்வைத்தியர் ஒருவரின் மீன் தொட்டி ஒன்றில் காட்சிப் பொருள் ஆக்கப்படுகிறான்.
தந்தை மார்லின் துக்கத்தில் துவண்டு போனாலும் தன் மகன் நிமோவைத் தேடி நெடும் பயணம் செல்கிறார். தந்தையுடன் இணையும் முயற்சியில் சிறுவன்
நிமோவும் கடும் பிரயத்தனம் செய்கிறான்.
இந்த அவஷ்தைகள்,ஆபத்துக்கள் அனைத்தும் அழகாக வண்ண வண்ணக் காட்சிகளாகக் கொண்டமைந்ததுதான் இத் திரைப்படம்.
வெள்ளித் திரையில் யுராசிக் பார்க்/ Jurassic Parkஐ தந்த அமெரிக்கர்களே இந்தச் சினிமாவை எடுத்திருந்தனர்.
இத் திரைப்படம் வெளிவந்த அதே ஆண்டுலேயே(2003) சுடச் சுட தமிழாக்கம் செய்தமை குறிப்பிடத்தக்க இன்னுமோர் சிறப்பம்சம் ஆகும்!
அன்று தமிழர்களின் நிழல் அரசு(De facto government) போரின் கிடுக்குப் பிடியில் சிக்கி ஊர் உலகத்தைச் சுற்றிப் பார்க்கும் உரிமையையும் இழந்து நின்ற சிறுபிள்ளைகளின் உளநலத்தில் கொண்ட அக்கறையின் ஓர் வெளிப்பாடாக இந்தப் படத்தின் தமிழாக்கம் நோக்கப்பட்டது.
அதே நேரம், கிளிநொச்சியைத் தலை நகராகக் கொண்டு இயங்கிய தமிழர் அரசு போர்ச் சூழலில் வாழும் எம் தேசத்துக் குழந்தைகளும் சர்வதேசத்துடன் அதன் வேகத்தில்  பயணிக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்தது.
இத்துடன் முற்றுப் புள்ளியிடாமல், பிறமொழிகளில் வெளிவந்த சமூகத்துக்கு உகந்த நல்ல சினிமா படங்களையும் தமிழாக்கம் செய்து தந்தனர்.
FINDING NEMO: The Best Animated  Feature Film in 2003.
      தொடரும்…