ஆரோக்கிய வாழ்வு

சாதிக்கப் பிறந்தவன் மனிதன். மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் அவ்வை. ஒரு மனிதனுக்குக் குடும்பம் எவ்வளவு முக்கியோ அதே அளவு முக்கியம் நாடும். படிப்படியாகப் பார்த்தால், குடும்பம், சுற்றம், சமூகம், ஊரகம், தேசம் என எல்லாமே இன்றியமையாதது. நற்சிந்தனை, நற்செயல்கள்தான் இறை அருள் முடியாது என்ற சொல் அகற்றப்பட்டு, முடியும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். இப்படி வாழ்ந்து சாதித்தோர் பலர்.

மனிதனுக்கு ஆரோக்கியம் தேவை. ஆரோக்கியம் அகம், பு்றம் இரண்டுக்கும் தேவை. அகமும் புறமும் இரண்டு கண்கள் போல. உடல் ஆரோக்கியத்தை எடுத்துக் கொண்டால், சத்துணவு உடலுக்குத் தேவைப்படுகிறது. சத்துணவை உள்ளெடுப்பதிலும் பழக்க வழக்கங்கள் உண்டு. அளவறிந்து உண்ணல் வேண்டும். நிறை உணவை உண்ண வேண்டும்.

இதையேதான் சித்தர்களும் ஞானிகளும், மகான்களும் கூறியிருக்கின்றார்கள். சமிபாடடைந்த பின்புதான் சாப்பிட வேண்டும் என்றும் தெரிந்துண்ண வேண்டும் என்றும் சொல்லி உள்ளார் வள்ளுவர்.

மருந்தென வேண்டவாம் யாக்கை அருந்தியது

அற்றது போற்றி உணின்

இது மட்டுமல்லை இலை வகைகளில் ஏராளமானவையை நாம் பயன்படுத்தலாம். விருந்தோடு மருந்தாகவும் அவற்றைப் பயன்படுத்தலாம். இவைகள்தான் மூலிகைகள். இதையே சித்த/ஆயுள் வேத எனக் கூறுகின்றோம். இம்மூலிகைகளையே சித்த/ஆயுள்வேதம் என்கின்றோம்

இம்மூலிகைகளில்ச் சில, கடவுளருக்கு உரியதாகவும்,உள்ளன.

எடுத்துக்காட்டு * துளசி, விஸ்னு,