வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க – சனி தொடர்ச்சி

சனி என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வர்ரது வளையங்கள் தான். வளையம்னாலே மோதிரமும், மோதிரம் என்றாலே கல்யாணமும், கல்யாணம்னாலே சனியும் நினைவுக்கு வருவதும் கவனிக்க வேண்டிய விஷயம்தான்,

சனியின் வளையங்களை முதலில் கவனிச்சவர் வேற யாரா இருக்கும்.. கலிலியோவைத் தவிர.. அவர் என்ன சொன்னாருன்னா, சனிக் கிரகம் ஒண்ணில்ல.. மூணு கிரகம் சேர்ந்திருக்கும் போல.. எல்லாம் ரொம்ப பக்கம் பக்கமா இருக்குது போல அப்படின்னார்…

1655 ல தான் கிறிஸ்டன் ஹைகஸ் அப்படிங்கறவர் அது வளையம்னு கண்டு பிடிச்சார்.. மெலிசா, தட்டையா ஓட்டைபோட்ட அப்பளம் மாதிரி சனியைச் சுற்றி இருக்கு. அது நீள் வட்ட வடிவமானது அப்படின்னு எல்லாம் சொன்னார்.

1800களின் மையப்பகுதியில்தான் அந்த வளையங்கள் சின்னச் சின்ன துகள்களினால் ஆனது.. சாதா அப்பளமில்ல.. நொறுங்கிப் போன அப்பளம் அப்படின்னு கண்டுபிடிச்சாங்க.

சனிக் கிரகத்தின் இந்த வளைய்ங்களை பயனியர் 11 தான் 1979 ல் முதன் முதலா படம்புடிச்சது. அதுக்கு முன்னால பூமியில் இருந்து எடுக்கப் பட்ட படங்களை விட இந்தப் படங்கள் தெளிவாகவே இருந்தது.. அதுக்குப் பின்னால வாயேஜர்1, வாயேஜர் 2 ஆகியவை 1980, 81 லும் காசினி 2004 லும் சனிக்கிரகத்தை படமெடுத்தன. காசினி சனியைச் சுத்தி வருது,,, இன்னும் சுத்துதான்னு தேடணும்.

சனியின் வளையங்களில் மொத்தம் 7 பெரிய வளையங்கள் இருக்கறதா வரிசைப் படுத்தி இருக்காங்க.. அவை சனியில் இருந்து இருக்கும் வரிசையில் பார்த்தால்

D, C, B, A, F, G, E

அதாவது D என்பது வெளிப்புறத்தில் இருப்பது E என்பது உட்புற வளையம்..

A, B, C மூணும் அகலமா இருக்கும் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வளையங்கள் இவைதான்.

அதுக்கப்புறம் நுணுக்கமாப் பாக்குறப்பதான் C இரண்டு பகுதியா இருக்கறதும் A நாலு பகுதியா இருக்கறதும் மெதுவா மெதுவா புரிஞ்சது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/9/96/Saturn_eclipse_exaggerated.jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/8/8a/Unraveling_Saturn%27s_Rings.jpg

வளையங்கள் குரு, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களுகும் உண்டு. இருந்தாலும் சனிகிரகத்திற்கு உள்ளது போல அழகான அழுத்தமான வளையங்கள் வேறு எந்த கிரகத்துக்கும் இல்லை..

ஆமாம் அந்த வளையங்களில் அப்படி என்னதான் இருக்கு?

இந்த வளையங்கள் சராசரியாக 20 மீட்டர் மட்டுமே தடிமன் உள்ளவை. இதில் 93 சதவிகிதம் பனிப்பறைகளும் 7 சதவிகிதம் கரிமமும் வேறு சில பாறைத் துகள்களும் உண்டு.

இப்போ சூரிய மண்டலத்தை கண் முன் கொண்டு வந்து பாருங்க… கோள்கள் சூரிய மண்டலத்தை சுற்றி வரும் பாதையைப் பார்த்தால்…

அதுவும் சனிக் கிரகத்தை சுற்றி உள்ள வளையம் போல ஒரு தட்டு வடுவில்தான் தெரியும்.. கொஞ்சம் மேல போய் நம்ம பால் வீதியை எடுத்துக்குங்க.. அதுவும் ஒரு மிகப் பெரிய கருந்துளையை சுற்றி வரும் வட்டு வடிவில்தான் இருக்கு,,

வட்டு வடிவம் என்பது கிரகங்கள் அமைவதில் ஒரு மைல்கல்லாகும்.. பூமிக்கும் ஒரு காலத்தில் இதே போல் வளையம் இருந்து அதில் இரண்டு சந்திரன்கள் இருந்து அவைகளும் கூடி ஒரே சந்திரன் ஆனதை முன்னால சந்திரன் உண்டான தியரியைச் சொன்னப்ப சொல்லி இருக்கேன்.

ஒரு கிரகம் உண்டாகும் போது அது கோளவடிவம் பெரும்பொழுது இதுமாதிரி தூசிகள் வட்டு வடிவத்தை கொண்டு அந்த கிரகத்தைச் சுற்றி வருவதும்.. மெல்ல மெல்ல கிரகத்தின் ஈர்ப்பு விசையால் அவை கிரகதில் விழுந்து கிரகம் பெரிதாவதும் கிரகத்தின் வளர்ச்சிப் பாதையில் உள்ள பகுதிதான்.

இப்போ மறுபடி சனியின் வளையத்திற்கு வருவோம். இப்போ நாம பாக்கிறமே அதை முக்கிய வளையம் அப்படின்னு சொல்லலாம். ஏன்னா, 2009 அக்டோபர்ல இன்னொரு பெரிய வளையத்தை கண்டு பிடிச்சிருக்காங்க. சனியின் இந்தப் பெரிய வளையம் ரொம்ப மெல்லியது, அதே சமயம் மிக மிக பெரியது… அது முழுக்க முழுக்க பனித் துகள்கள்தான்.

முக்கிய வளையம் ஏழு பெரும் பகுதிகளை கொண்டு இருப்பதாக பார்த்தோம்..

முதல்ல A -வளையத்தைப் பார்ப்போம்.

மிகவும் பிரகாசமான A,B,C வளையங்களில் A தான் மிக வெளிப்புறம் உள்ளது. இதன் உட்பகுது காஸினி எல்லையில் அட்லஸ் என்னும் சின்ன சந்திரன் இருக்கு…

A வளையத்தின் வெளிப்புற எல்லையில் எபிமேதியூஸ், ஜேனஸ் என்னும் இரண்டு சந்திரன்கள் உள்ளன..

A வளையத்தின் சுற்று வேகமும், இந்தச் சந்திரன்களின் சுற்றுவேகமும் 7:6 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அதாவது வளையம் சனியை 7 முறை சுற்றும் நேரத்தில் இந்தச் சந்திரன்கள் 6 முறை சுற்றி வரும். இதனால் நம்ம பால்வீதியில் எப்படி ஸ்பைரல் அமைப்பு இருக்கோ அதே மாதிரி வளையத்திலும் ஸ்பைரல் அலைகள் உண்டாகுது..

இன்னும் வரும்