32.1 C
Jaffna
Wednesday, April 24, 2024
  CNN விளைவு என்றால் என்ன..? ஆனையிறவுச் சண்டை நடந்துகொண்டிருந்த காலத்தில், எனக்குப்பழக்கமான ஒரு மேலைத்தேயப் படையதிகாரிக்கு புலோப்பளைச் சண்டைக் காட்சியைப் போட்டுக்காட்டினேன். இதற்குச் சிலமாதங்களுக்கு முன்னர்தான் அவர் ஆனையிறவுச் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு " அது ஒரு அசைக்கமுடியாத கோட்டை" என என்னிடம் கூறியிருந்தார். இத்தாவிலில் நிலை கொண்டிருந்த பால்ராஜின் படையோடு, சிறிலங்காவின் 53 வது பிரிவின் படைகளைத் திரும்பத்திரும்ப மோதவிட்டு, தமது ஆள்வலுவைச் சிறிலங்காவின் படைத்தளபதிகள் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என அந்த மேலைத்தேய இராணுவ அதிகாரி கவலைப்பட்டார். (ஏனெனில் 53.வது படைப்பிரிவை வளர்த்தெடுக்க அவரது நாடு...
"ஊற்றங்கரையிலும் நீர் இருப்பீர் உலுவிந்தம் பழத்திலும் நீர் இருப்பீர்!"...... முல்லைத்தீவில் எதிரியின் விலா ஒடித்து தமிழன் விழா எடுத்த போது வெளிவந்த ஒரு விடுதலைப்பாடலின் அர்த்தம் பொருந்திய வரிகள் இவை! முல்லைச்சமரில் வீரச்சாவு அடைந்த மாவீரர்கள் குறித்து எம் தேசக் கவிஞரின் மனதில் எழுந்த கவிதைகளே இசைவார்ப்புச் செய்யப்பட்டு விடுதலைப் பாடலாக வெளிவந்தது. அழகழகாய் சின்னஞ் சிறிய மின்குமிழ்களாய் உலுவிந்தம் பழம் பழுத்துக் குலுங்கும் மாதத்தில் முல்லைச்சமர் நடை பெற்றதால் முத்தான இந்த முதல் வரிகள் எழுந்தது. வற்றாத ஊற்றாய் நீர் பெருகும் ஊற்றங்கரைக்கு அருகே உள்ள முல்லை நகரில் இந்த...
“பகிரப்படாத பக்கங்கள்” என்ற இந்த நூலில் சுமார் இருபது தேவ தேவதைகளின் வரலாற்றுக் குறிப்புகள் பதியம் செய்யப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். அதிலும் தமிழீழ மருத்துவத்துறை சார்ந்த பலரது குறிப்புகள் அதிகம் வாசிக்க கிடைத்தன.   உண்மையில் தமிழீழ மருத்துவர்களுக்கு நிகராக எங்குமே வேறு மருத்துவர்களைப் பார்த்ததில்லை. தமிழீழ மருத்துவர்களுடனான எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும், இந்த நூலின் பதிவுகளிலிருந்தும் அவர்கள் ஒரு தனி வரம் பெற்றவர்கள் என்றே சொல்ல முடியும். அவர்களுக்கான வரமும் தரமும் அவனொருவனிடம் இருந்தே கிடைத்திருக்கும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். சொல்லப்போனால் இங்கே ஒவ்வொரு பகுதியாக பகிரப்பட்டிருக்கும் ஒவ்வொரு...
"போர்க்காலம் ஆயினும் அதுவே பொற்காலம்" என இன்று போற்றப்படும் காலத்தில் வன்னியிலிருந்து மேலதிக மருத்துவ சிகிச்சைக்காகவும் மற்றும் அத்தியவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் எம் மக்கள் வவுனியா செல்வது வழமை. அவ்வாறு பொது மக்கள் தங்களது அவசியமானதும் மற்றும் அத்தியவசியமானதுமான அலுவல்களை முடித்துக் கொண்டு மீளவும் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் திரும்புவார்கள். அக்காலகட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் கறுக்காய்குளம் ஊடாக அல்லது மடு ஊடாக என மாறி மாறி அந்த இடர்மிகு பயணங்கள் இடம்பெற்றது. ஒரு முறை புதிய பாதை திறந்து உங்களை அனுப்பப் போவதாக ஶ்ரீலங்காப் படையினர் பயணிகளை மூன்றுமுறிப்பு...
சீரோடும் பெரும் சிறப்புகளோடும் நாம் வாழ்ந்த காரைநகரில் திரு.கதிரவேலு திருமதி வசந்தி தம்பதிகளின் தலைமகனாக 11 - 02 - 1971ஆம் ஆண்டு அவதரித்தார். காந்தத்தைப் போலவே கவர்ந்திழுக்கும் கண்களையும் அழகிய வதனமும் வெள்ளை நிறமும் கொண்ட குண்டான அந்தக் குழந்தையை ஊரில் எல்லோரும் "மாம்பழம்" என்றே அழைத்தனர். காரைநகரில் ஆரம்பக் கல்வியைக் கற்று ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் யாழ்மாவட்ட மட்டத்தில் அதி கூடிய புள்ளிகள் பெற்று யாழ் இந்துக் கல்லூரியில் க/பொ/த உயர்தரம் வரை கல்வி கற்ற பரீட்சையிலும் நல்ல பெறுபேறுகளை தனதாக்கியவர். மருத்துவ...
தொண்ணூற்றேழாம் ஆண்டெனெ நினைக்கின்றேன். முள்ளியவளையில் முதல் முதல் ஐயாவை காண்கிறேன். சத்தியசாயி ஆச்சிரமத்தில் ஓர் இசையரங்கு. “கெங்காதரன் டொக்ரர் புல்லாங்குழலாம்”. புல்லாங்குழலை ஒரு அரங்க நிகழ்வாக அன்றுதான் முதலில் பார்க்கப்போகிறேன். பக்கவாத்தியக்கலைஞர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். அந்த எழிமையான மனிதன் சைக்கிளில் ஒரு பையில் மூன்று புல்லாங்குழல்களை கொண்டு வந்தார். ஒரு மருத்துவர் காரிலோ அல்லது வேறேதும் வாகனங்களிலோ வருவார் எனவே எதிர்பார்த்திருந்தேன். அந்தக்கம்பீரமான நடையுடன் வந்து அரங்கில் அமர்ந்தார். அரங்கு ஆரம்பமாயிற்று. திகைப்புடனும், வியப்புடனும் வேணுகானத்தில்சொக்கிப்போனேன். கணீரென்று காதுகளில் பாய்ந்தது வேய்ங்குழலின் ஸ்வரங்கள். இன்னும் என்னிதயத்தைத் தொட்டது! “ கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பணிந்தேன் “ எனும்...
பொங்கி எழுந்த பென்னம்பெரிய ஆழியின் அலைகளுடனும் பொருதியபடியே மங்கிய நிலாவொளியில் குடாரப்பு நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். நஞ்சணிந்த வஞ்சினம் கொண்ட நெஞ்சினிலே "வெல்வோம் வெல்வோம்" எனும் நம்பிக்கையும் விடுதலை வேட்கையும் விஞ்சியே நின்றாலும் Sea sickness காரணமாய் படகிலிருந்த போராளிகளில் பலர் களைப்படைந்திருந்தனர். போராளிகளில் சிலர் சத்தி எடுத்ததால் மேலும் சோர்வடைந்தனர். ஆதலால் களமருத்துவர்களாகிய எங்களின் பணி விசைப்படகிலேயே ஆரம்பித்திருந்தது. சத்திக்காக(Vomiting )அல்லது குமட்டலுக்காக( Nausea) கொடுக்கப்படும் அனைத்துமே சத்தியை நிறுத்திவதுடன் நித்திரையைத் தூண்டக் கூடியது என்பதால் மாத்திரைகளைக் கொடுக்கவும் முடியாமல் திண்டாடினோம்....." அதே நேரம் கடலில் உண்டாகக் கூடிய அனேக விடையங்களை...
ஆனைகள் அழகழகாய் சோடி சோடியாய் அணிவகுத்து வந்து ஆடிப்பாடிச் {டூயட் பாடி} செல்லும் அந்தப் பொன்னூரின் பெயர் தென்னியன்குளம் ஆகும்!   தென்னியன்குளத்துக் கிராமத்தின் அடர் அடவியும் அடவியை அண்டிய பெரியகுளமும் குளத்தோர வயல்வெளியும் ஆனைகளினதும் ஏனைய காட்டு விலங்குகளின் சொர்க்காபுரி என்றே பசொல்லலாம். பெற்றோரியத்திற்குப் பெயர் பெற்று அப்படித்தான் ஒரு முறை டூயட் பாடிய ஒரு சோடி ஆனை ஒரு குட்டியைத் தவறவிட்டுச் சென்றுவிட்டன. வேட்டைக்கு சென்ற ஒருவர் காட்டுவித்தனில் தனித்து அலைந்த அந்தக் குட்டியை அங்குள்ள தேவாயலப் பங்குத் தந்தையிடம் பக்குவமாய் ஒப்படைத்தார். தேவாயலத்தில் பசியால் கத்திய ஆனைக்குட்டிக்கு தனது...
எமது இனிய சகோதரனின் முதலாம் ஆண்டுத் திதி. மார்கழி 31 - 2023.. எங்கள் அருமைச் சகோதரன் கட்டுடல் தளர்ந்து கைகால் நலிந்து அறிவு சோர்ந்து கண்கள் சொருகி எங்களை மறந்த ஒற்றை நாள். எங்கள் மனங்களில் காரிருள் சூழ எங்கள் உயிர்நாடிகள் இடியோசை கேட்ட நாகம் போல் தடம்புரண்டு நின்றது. செய்தி கேட்ட அந்த நொடி இரத்தத்தில் இன்று வரை உறைந்து போயுள்ளது. தக்க தருணங்களில் எம்மைத் தாங்கி நின்ற நீ எம்மைத் இவ்வாறு தவிக்க விட்டுப் போவாய் என்று அன்றும் நாங்கள் எண்ணவில்லை. உந்தன்...
எங்கள் கரும்புலி லெப்.கேணல் பூட்டோ காவியமாகிய பின்னர் யான் எழுதிய கவிதையின் தலைப்பு இது. ஏகலைவன் குருதட்சணைக்காய் கட்டைவிரலைக் கொடுத்தவன். எங்கள் ஏகலைவன் வருங்கால சந்ததிக்காய் கட்டைவிரலை களத்திடை கொடுத்தவன். கட்டைவிரலை கொடுத்துவிட்டு கனகாலம் களப்பணி செய்தவன். அந்த ஏகலைவன் வில்வித்தையில் மட்டுமே வித்தகன். இந்த ஏகலை சொல்வித்தையிலும் வித்தகன். கவிதை, கட்டுரை வரைவது தொடக்கம் பாடலாசிரியர், நடிகர் என பல்கலை வித்தகன். களப்பணிகளில் கடின பணியாகி வேவு நடவடிக்கையிலும் பின்னர் சேகரித்த தகவலை வைத்து வரைபடம் வரைவதிலும் வித்தகனாய் விளங்கினான். எனும் தொனிப்பொருளில் யான் யாத்திருந்த கவிதை தொலைந்துவிட்டது. இந்தப் பதிவைப் பார்த்த போது சில...

அண்மைய பதிவுகள்

POPULAR POSTS